Difference between revisions of "I10"
(Created page with "Category: Kalavathi 400px ==Hariharan== Our 1 10 has been with us for a cherished 12 years with us since July 4 200...") |
(No difference)
|
Revision as of 07:54, 8 July 2020
Hariharan
Our 1 10 has been with us for a cherished 12 years with us since July 4 2008
Kalavathi
நீலப் பட்டுடுத்தி... இரட்டைப் பின்னல் மல்லியுடன்... அழகாய் ஒரு இளஞ்சிவப்பு அட்டிகையும்... புருவத்தை கீழ் கொண்டு பிறந்தாலும்... கண்ணக் குழியோடு கண்ணுக்கு அழகாய் காட்சி தரும் என் குடும்பத்தின் இன்னுமொரு உறுப்பினரே...!
நீ வந்து இன்றோடு ஆண்டு பனிரெண்டு ஆகித் தான் விட்டது. நமக்கான உறவு கணக்கிற்கு ஒரு ஜோடி காலம் தான் என்றாலும், கணக்கில்லா அனுபவத்தை பெற்றிருக்கிறாய் எங்களோடு நீ...!
பார்க்காமல் பார்க்கிறாய்... பேசாமல் பேசுகிறாய்... தெரியாமலேயே ரசிக்கிறாய்... சமயங்களில் எங்களோடு மௌனமாக அழவும் செய்கிறாய்... மொத்தத்தில் நீயும் ஒன்றாகிப் போனாய் எங்கள் ஒவ்வொரு நிலையிலும்...!
மனைவியும் சுமந்தாள்... என் பங்குக்கு நானும் தான் சுமக்கிறேன்... ஆனால் நீயோ மொத்த குடும்பத்தையும் ஒருசேர தாங்குகிறாய்... மகிழ்ச்சியிலும் சரி... அவசிய , அவசரத்திலும் சரி... நீ செய்யும் பேருதவிக்கு நன்றி என ஒற்றைச் சொல் சொல்லி விடலாகாது...
உன்னை எங்களுக்குள் பத்திரப் படுத்துகிறோம்... ஓடும் வரை நீ... ஓய்ந்து விட்டாலும் நினைவோட்டத்தில் நீ.... நாளும் எங்களோடு நிரந்தர உறுப்பினராக பதிவு செய்கிறோம் மனதோடு உன்னை...
🙏🙏🙏.