Difference between revisions of "அண்ணா"
(Created page with "Category: Kalavathi தென்னாட்டு பெர்னாட்ஷா. தென்னாட்டு காந்தி. சின்ன காஞ்சீ...") |
(No difference)
|
Revision as of 20:45, 3 February 2021
தென்னாட்டு பெர்னாட்ஷா.
தென்னாட்டு காந்தி.
சின்ன காஞ்சீவரம் தந்த அண்ணன்.
பச்சையப்பன் கல்லூரி மாணவன்.
மிகச் சிறந்த சொற்பொழிவாளர்.
மேடைப் பேச்சாளர்.
மொழி வளம் நிறைந்தவர்.
தமிழோடு ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப்பெற்றவர்.
அடுக்கு மொழி கலைஞர்.
எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்.
கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டியவர்.
மக்கள் தொண்டை மகேசன் தொண்டாகப்
பார்த்தவர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அறிந்தவர்.
நல்ல தம்பி, வேலைக்காரி, ரங்கோன் ராதா, தந்த கலைஞர்.
ஓர் இரவு வசனத்தை ஒரே இரவில் எழுதி முடித்தவர்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் தந்து கணேசனை சிவாஜி யாக்கியவர்.
மொழிந்தது பெரியார் ஆயினும் அதில் கணேசனை வழி மொழிந்தது இந்த காஞ்சித் தலைவன் தான்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என நம்பியவர்.
கடவுள் ஒருவரே, மனித நேயமும் ஒன்றே என்று பறைசாற்றியவர்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதையே தன் கொள்கையாகக் கொண்டவர். பெரியாரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். கர்மவீரர் காமராசர், எம்.பக்தவச்சலம் போன்றோரைத் தொடர்ந்து தமிழை ஆண்டவர்.
No sentence can end with because because, because is a conjunction. எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல். என்று சொல்லி ஆங்கிலத்திலும் தன் மொழித் திறமையை வெளிப்படுத்தியவர்.
தன் இறுதி ஊர்வலத்திலும் சாதனை புரிந்து உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.
தமிழ்...! தமிழ்...!! தமிழ்...!!! என்பதையே தன் மூச்சாக வாழ்ந்து தமிழ் நாடு என்று நம் மாநிலத்திற்கு பெயர் மாற்றம் தந்தவர்.
அத்தகைய சிறப்பு பெற்ற, நம் எல்லோராலும் அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படுகிற காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை யின் 52 வது நினைவு தினம் இன்று...🙏🙏🙏.
அறிஞர் அண்ணாவின் நினைவுகளுடன்...
என்றும் அன்புடன்
உங்கள் கலாவதி அய்யனார்...🙏