Difference between revisions of "கொய்மலர் வளர்ப்பும் வர்த்தகமும்"
All>Raj |
All>Raj |
||
Line 45: | Line 45: | ||
நிறுவன நிதி இயக்குநர் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அருகில் சென்றதும் விருந்தினர்களுக்கு மலையாளத்தில் அறிமுகம் செய்துவைத்தார் ”இவர் வெங்கடேஷ்; மதுரைக்காரர்; உற்பத்தி பிரிவில் இருக்கிறார்”. நான் கைகொடுத்துவிட்டு “நீங்க சார்...” என்றேன். அவர் புன்னகைத்துவிட்டு “நான் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்” என்றார். நான் வியந்து “சாரி சார்; அரசியல்ல நான் கொஞ்சம் மக்கு” என்றேன். “பரவால்ல; ஆனா அப்பாவ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்; கேரளா ஃபைனான்ஸ் மினிஸ்டர்; தொடர்ந்து ஆறேழு தடவையா இருக்கார்” என்றார். | நிறுவன நிதி இயக்குநர் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அருகில் சென்றதும் விருந்தினர்களுக்கு மலையாளத்தில் அறிமுகம் செய்துவைத்தார் ”இவர் வெங்கடேஷ்; மதுரைக்காரர்; உற்பத்தி பிரிவில் இருக்கிறார்”. நான் கைகொடுத்துவிட்டு “நீங்க சார்...” என்றேன். அவர் புன்னகைத்துவிட்டு “நான் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்” என்றார். நான் வியந்து “சாரி சார்; அரசியல்ல நான் கொஞ்சம் மக்கு” என்றேன். “பரவால்ல; ஆனா அப்பாவ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்; கேரளா ஃபைனான்ஸ் மினிஸ்டர்; தொடர்ந்து ஆறேழு தடவையா இருக்கார்” என்றார். | ||
"நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” - ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன். | |||
செந்தில் அண்ணா ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பசுங்குடில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். கென்யா, டான்சானியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் என்று அலுவல் நிமித்தமாய் பன்னாடுகள் பயணித்துக்கொண்டே இருப்பவர். அவர் அப்பா தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தலைமை பேராசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். | |||
மலர் சஞ்சிகைகளின் ஆங்கில இந்திய பதிப்பு வெளியீடுகள் மேலோட்டமானவை என்றும், பன்னாட்டு ஆங்கில மாத மலர் இதழ்களும் எல்லைகள் கொண்டவை என்றும் சொன்னார். உண்மையில் மலர் தொழில்துறை பற்றிய அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் டச்சு மொழியில் வெளியாகும் மாத இதழ்கள்தான் உகந்தவை என்றார். அடுத்தமுறை அவர் நெதர்லாந்து கண்காட்சிக்கு சென்றபோது “ஆங்கில-டச்சு” அகராதி வாங்கிவர சொன்னேன்; வாங்கிவந்து பரிசளித்தார். “கோர்டஸ்” எனும் மலரினப்பெருக்க நிறுவனத்தின் ஆப்ரிக்க தலைவரை தொடர்புகொண்டு “புளோமிஸ்ட்ரை” எனும் டச்சு மலர் மாத இதழின் பழைய இரண்டுவருட வெளியீடுகளை அள்ளிவந்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அகராதி துணைவைத்து எழுத்து கூட்டி படித்து கொண்டிருக்கிறேன். உண்மைதான், கொய்மலர் தொழில் துறையின் பிரமாண்டமும், அதன் பரந்த உலகும் எனக்கு புரிந்தது. | |||
இஃப்ரைம் எனும் இஸ்ரேல் ஆலோசகரிடமிருந்து, ஹீப்ரு கற்றுக்கொள்ளும் நூலும், ஜூவான் எனும் ஸ்பெயின் நண்பரிடமிருந்து ஆங்கில வழி ஸ்பானிஷ் அகராதியும், ஃப்ரான்ஸின் லூசியிடமிருந்து ஃப்ரென்ச் ஆரம்பநிலை பாடங்களும் வாங்கி வைத்து அவ்வப்போது புரட்டி கொண்டிருக்கிறேன். பேசும் அளவுக்காவது இந்த மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையிருக்கிறது. அலுவலக இணைய கடித தொடர்புகளில் காலை மாலை வணக்கங்கள், இனிய நாளுக்கான வாழ்த்துக்கள் போன்ற சின்ன சின்ன சொற்றொடர்களை அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அனுப்பும்போது அவர்கள் கொள்ளும் உற்சாகம், அவர்களின் பதில் கடிதங்களில் தெரிகிறது. | |||
பசந்த்குமார் பிர்லாவிற்கு மூன்று வாரிசுகள்; ஒருவர் ஆதித்யா குழுமங்களின் தலைவர் குமாரமங்கலம்; மற்ற இருவர் மஞ்சுஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ. மஞ்சுஸ்ரீ குழுமத்தின் ஓசூர் மலர்ப்பண்ணையில்தான் நான் ஆரம்பத்தில் பணிபுரிந்தது. ஜெயஸ்ரீயின் “செஞ்ச்சுரி” மலர்வளர்ப்பு பண்ணை புனேயில் இருந்தது. அங்கு மேலாளராய் வேலை செய்த சித்தார்த்-ஐ 98-ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 2015-ல் கென்யா நைவாஸாவில் தோட்டக்கலை கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து தோளில் கைவிழ திரும்பி பார்த்தால் சித்தார்த் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார். “எப்படியும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றில்தான் மறுபடியும் சந்திப்பேன் என்று தெரியும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். |
Revision as of 22:49, 1 July 2016
இயல் நான்காம் வகுப்பின் முதல் மூன்று மாதங்கள் படித்த ஆஸ்வால் பள்ளியின் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட வளாகத்தின் முகப்பில் நுழைந்தபோது, கடந்த ஐந்து வருடங்களாய் வருடம் தவறாமல் சந்திக்கும் ஹாலந்து ஜெஸ்பர் புன்னகையுடன் கைகொடுத்தார். பன்னாட்டு மலர்வர்த்தக கண்காட்சி ஜூனில் எட்டு தொடங்கி மூன்று நாட்கள் நைரோபியில் ஆஸ்வால் வளாகத்தில் நடைபெற்றது. இது வருடாந்திர நிகழ்வுதான். ஜெஸ்பர் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் ஒருங்கிணைக்கும் HPP குழுமத்தில் வேலை செய்கிறார். ஆஸ்வால் வளாகம் உயரமான மேற்கூரை கொண்ட ஆறுபெரும் அறைகளோடு, ஒரு நீண்ட நிலத்தடி அறையும் கொண்டது.
கண்காட்சி வளாகத்தின் அருகில் பட்டமளிப்பு விழா அரங்கில் திறப்புவிழா நடந்தது. அரசு வேளாண் அமைச்சக செயலர் ஒருவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிலத்தடி தளத்தில்தான் நுழைவு அனுமதி பதிவுகள் நடந்தது. முதல் நாளானதால் நல்ல கூட்டம். உள்ளே அரங்குகளில் பாதுகாப்பு சோதனை நடப்பதால் பத்து நிமிடங்கள் காத்திருக்குமாறு அறிவித்தனர்.
கென்யாவின் மற்ற மலர்ப்பண்ணைகளில் வேலைசெய்யும் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். உகாண்டா, டான்சானியா, எத்தியோப்பாவிலிருந்தும் நண்பர்கள் வந்திருந்தனர். பதினைந்து வருடங்களாக பார்க்காத இந்திய நண்பர்கள் சிலரை பார்த்தது சந்தோஷமாயிருந்தது. கண்காட்சிக்காக பயணித்து வந்ததாய் சொன்னார்கள்.
கோவை வேளாண் பல்கலையில் தோட்டக்கலை முடித்து 1995-ல் ஓசூரில் பிர்லா குழுமத்தின் மலர்ப்பண்ணையில் வேலைக்கு சேரும்போது தெரிந்திருக்கவில்லை கடலின் கரையில் கால்நனைக்கப் போகிறேன் என்று. இருபத்தோரு வருடங்கள் கடந்துவிட்டன; இன்னும் அலைப்பகுதியில்தான் இருப்பது போன்ற உணர்வு. கொய்மலர் வளர்ப்பின் பிரமிப்புகளும், வியப்புகளும், ஆச்சர்யங்களும் அறிமுகமான அந்த தொண்ணூறுகளின் பின்பாதி இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. ஓசூரில் பதினோரு வருடங்கள் முடித்து, மும்பைக்கு 2006-ல், ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் மலர்ப்பிரிவில் சேர்ந்தபோது எல்லைகள் அகலமாயின. 2011-ல் கென்யா வந்தபின்தான் மலர்த்துறையின் பிரமாண்டம் கண்முன் விரிந்தது.ஆச்சர்யங்களால் விரிந்த கண்களும் மனமும் இன்னும் அப்படியே இருக்கின்றன.
B ஹாலின் நுழைவாயிலில் கண்காட்சி வரைபடம் பங்கேற்பாளர்களின் பெயர்களோடு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நிறுவன அரங்கு ஹால் D-ல் இருந்தது. கிட்டத்தட்ட 170-க்கும் மேலான அரங்குகள்.
வான், தரை, கடல் வழி போக்குவரத்து நிறுவனங்கள், விமான நிலைய பெரிஷபிள் சரக்கு கையாளும் நிறுவனங்கள், உர, மருந்து விற்பனையாளர்கள், மலர் சஞ்சிகைகள், மலரினப்பெருக்க நிறுவனங்கள், விருத்தி வர்த்தகர்கள், மலர் உற்பத்தி பண்ணைகள், இடைநிலை புரோக்கர்கள், பசுங்குடில் வடிவமைப்பாளர்கள், நீர்ப்பாசனத்துறை நிறுவனங்கள், பன்னாட்டு மலர் ஏல நிறுவனங்கள்...
நம்பி, காலை வணக்கம்.
1. வளர்ப்பு பண்ணையில், பசுங்குடிலில் மலர்களை கொய்வதிலிருந்தே, அவற்றுக்கான செயல்முறை சங்கிலித்தொடர் ஆரம்பிக்கும். கொய்தவுடன் அடிப்பாகம் உள்ளிருக்கும்படி குறிப்பிட்ட வேதிக்கரைசல் கொண்ட பக்கெட்டுகளில் வைக்கவேண்டும். பக்கெட்டுகள் அரை மணிக்குள்ளாக 8 - 10 டிகிரி செல்சியஸ் கொண்ட குளிர் அறைக்கு கொண்டுவரப்படும். 4-5 மணிநேரத்திற்குப்பின் அவை வெளியில் எடுக்கப்பட்டு தரம் பார்க்கப்பட்டு, நீளம் மற்றும் பூ விரிந்த அளவு வைத்து பிரித்து அடுக்கி ஒருமுக க்ராஃப்ட் அட்டை சுற்றப்பட்டு மறுபடி வேறு வேதிக்கரைசலில் வைக்கப்பட்டு 2-4 டிகிரி செல்சியஸ் கொண்ட வேறு குளிர் அறைக்கு மாற்றப்படும். (இந்த 2-4 டிகிரி செ வெப்பநிலை கடைசி வாடிக்கையாளருக்கு பூக்கள் சென்றடையும்வரை தொடரவேண்டும்)
2. க்ராஃப்ட் சுற்றப்பட்ட கொத்துக்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு தகுந்தவாறு தடித்த திண்மையான அட்டை பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு விமான நிலையம் செல்லும். (போக்குவரத்து வாகனங்களும் வெப்பக் கட்டுப்பாட்டு கருவிகொண்டவை; 2.-4 டிகிரி செல்சியஸ்) .
3. பூபெட்டிகள் கையாளும் சரக்கு விமானங்களும், இறக்கியபின் டெலிவரிக்கு முன்னால் அடுக்கிவைக்கும் கிடங்குகளும் இந்த வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.
4. எங்கள் நிறுவனம், ருஷ்யா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, சைனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி செய்கிறது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரே நாளில் சென்றுவிடும். ருஷ்யாவில் வான்வழி இறக்குமதி கெடுபிடிகள் அதிகம் என்பதால், ருஷ்யா செல்லும் ஆர்டர்கள் வான்வழி ஹாலந்து சென்று, அங்கிருந்து தரை மார்க்கமாக ருஷ்யா செல்ல ஒரு வாரமாகும். தொலைவுக்கு தகுந்தவாறு, பூ விரியும் அளவு வைத்து அறுவடை செய்யவேண்டும்.
5. கொய்மலர் ஏற்றுமதி வர்த்தகத்தில் முதலில் இருப்பது ரோஜாதான். ரோஜாவில் ஆயிரத்துக்கும் மேலான வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர். இவை தவிர ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க நிறுவனங்கள் புதுவகைகளை வெளியிடும். குறிப்பிட்ட இனப்பெருக்க நிறுவனத்தின் குறிப்பிட்ட ரோஜா வகையை நாம் வளர்த்து ஏற்றுமதி செய்யவேண்டுமென்றால், அந்நிறுவனத்திற்கு காப்புரிமை கட்டணம் செலுத்தவேண்டும். வகைக்கும் இனப்பெருக்க நிறுவனத்திற்கும் தகுந்தவாறு காப்புரிமை கட்டணம் ஹெக்டருக்கு 40000 யூரோக்களிலிருந்து 60000 யூரோக்கள்.
அலுவலக சந்திப்புகளில் எங்களின் இயக்குநர் அடிக்கடி சொல்லும் வாசகம் “இங்கு கென்யாவில் நாம் பசுங்குடில் கொய்மலர் வளர்ப்பில் முக்கியமாய் கவனித்து தொடரவேண்டியது, இஸ்ரேலிகளை போல் செடி மேலாண்மை செய்யவேண்டும்; டச்சுக்காரர்களை போல் நீர் தரவேண்டும்”. எனக்கு முதலில் ஆச்சர்யமாயிருந்தது. இஸ்ரேலிகள்தானே நீர் மேலாண்மையில் அசகாயர்கள்?; ஏன் இயக்குநர் கென்யாவிற்கு அது ஒத்துவராது என்கிறார் என்பது போக போக புரிந்தது.
எங்கள் நிறுவனத்திற்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு ஆலோசகர்கள் வருகிறார்கள். ஒருவர் இஸ்ரேலி - பசுங்குடில் வளர்ப்பின் செடிகள் மேலாண்மைக்கு ஆலோசனைகள் தருபவர். இன்னொருவர் ஃரெஞ்சுக்காரர் - பூக்கள் அறுவடைக்கு பின்னான தரம்பிரித்தல், கொத்துகள் உருவாக்குதல் மற்றும் மதிப்பு கூட்டும் செயல்சங்கிலிக்கு ஆலோசனைகள் தருபவர்.
இஸ்ரேலிகளின் நீர்ச்சிக்கனம் நாளடைவில் பூக்களின் சிறிதான தரக்குறைவிற்கு காரணமாவதை கண்டுபிடித்தோம். அவர்களை சொல்லி தவறில்லை; நீர் சிக்கனம் அவர்கள் இரத்தத்தில் ஊறிய ஒன்று!. அதிலிருந்து அந்த இஸ்ரேல் ஆலோசகர் ஒரு சதுர மீட்டருக்கு மூன்று லிட்டர் தண்ணீர் தரச்சொன்னால் நாங்கள் மூன்றரை அல்லது நான்கு லிட்டர் தருவதை வாடிக்கையாக கொண்டோம்.
கென்யாவின் மலர் தொழில்துறையின் சிறப்பு எல்லா நாட்டினரும் இங்கிருக்கிறார்கள் என்பதுதான். ரோஜா வகைகளை வெளியிடும் ஸ்பெயின், ஜெர்மனி, ஈக்வடார், ஆஸ்ட்ரேலியா, ஃப்ரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை கென்யாவில் வைத்துள்ளன. தங்கள் சோதனை குடில்களில் அவர்களின் வகைகளை பயிரிட்டு வளர்ப்பு நிறுவனங்களை அழைத்து அறிமுகம் செய்கிறார்கள்.
பெரிய வளர்ப்பு பண்ணைகள் அதிகம் வைத்திருப்பது குஜராத்திகள். ஃப்ரான்ஸ், நெதர்லாந்து, டச்சுப் பண்ணைகளும் உண்டு. தமிழ்நாட்டின் திருவையாறுக்காரர் கென்யாவில் ஆறு கொய்மலர் வளர்ப்பு பண்ணைகளும், இரண்டு இடைநிலை மலர் வர்த்தக நிறுவனங்களும் நடத்துகிறார்; பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர்; முப்பது வருடங்களுக்கு முன்பு துபாயில் தொழில் தொடங்கியவர்; மாதம் ஒருமுறை வந்துபோவார். நான் கென்யா வந்தபுதிதில் வேலை செய்தது அவரின் ஒரு மலர்வளர்ப்பு பண்ணையில்தான்.
அப்போது பள்ளிசெல்லும் வசதிக்காக மல்லிகாவும், இயலும் நக்குரு என்னுமிடத்தில் வீடெடுத்து தங்கியிருந்தனர். நான் பண்ணைக்குள்ளேயே விருந்தினர் இல்லத்தில் ஓர் அறையில் தங்கியிருந்தேன். வாரம் ஒருமுறை இயல், மல்லிகாவை பார்த்துவிட்டு வருவேன். பள்ளி விடுமுறையின்போது அவர்கள் பண்ணைக்கு வந்துவிடுவார்கள்.
விருந்தினர் இல்லத்திற்கு அவ்வப்போது இந்தியாவிலிருந்து அவரின் நட்புகள், உறவினர்கள் என வந்துபோவார்கள். ஒருமுறை “என் சுவாசக்காற்றே” படத்தயாரிப்பாளர் அன்சர் அலி குடும்பத்தோடு வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். இரவுணவின்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்தது நல்ல அனுபவம். ஏ ஆர் ரகுமான் நண்பரென்பதால் படம் தயாரித்ததாகவும், படம் தோல்வியடைந்தாலும் பாடல்கள் விற்பனையில் கொஞ்சம் காசு வந்ததாக சொன்னார்.
மற்றொருமுறை, அன்றைய நாள் வேலை முடித்து அறைசென்று குளித்து தயாராகி இரவுணவு அறைக்கு சென்றபோது, உணவு தயாரிக்கும் அகஸ்டின், விருந்தினர்கள் வந்திருப்பதால் இன்றைக்கு இரவுணவு எல்லோரும் வெளியில் சாப்பிட ஏதுவாக சேர்களும் உணவும் வெளியில் புல்தரையில் அமைத்திருப்பதாக சொன்னார். வெளியில் மேஜைகளில் வெண் துணிகள் விரித்து உணவுகள் அடுக்கப்பட்டிருந்தன. பாபிக்யூவில் இறைச்சி துண்டுகளை திருப்பிக்கொண்டிருந்தது ரோஸ். ஸ்வெட்டரையும் மீறி மெல்லிய குளிர் உள்ளேறியது.
நிறுவன நிதி இயக்குநர் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார். அருகில் சென்றதும் விருந்தினர்களுக்கு மலையாளத்தில் அறிமுகம் செய்துவைத்தார் ”இவர் வெங்கடேஷ்; மதுரைக்காரர்; உற்பத்தி பிரிவில் இருக்கிறார்”. நான் கைகொடுத்துவிட்டு “நீங்க சார்...” என்றேன். அவர் புன்னகைத்துவிட்டு “நான் கேரளா பாராளுமன்ற உறுப்பினர்” என்றார். நான் வியந்து “சாரி சார்; அரசியல்ல நான் கொஞ்சம் மக்கு” என்றேன். “பரவால்ல; ஆனா அப்பாவ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்; கேரளா ஃபைனான்ஸ் மினிஸ்டர்; தொடர்ந்து ஆறேழு தடவையா இருக்கார்” என்றார்.
"நீங்க டச்சு கத்துக்கணும் வெங்கி. இத்தனை வருஷமா இந்த பூ துறையில இருந்துகிட்டு, டச்சு இன்னும் கத்துக்கலைனா கொஞ்சம் வெட்கப்படணும்; தெரியாம இருக்கிறது தப்பில்ல; கத்துக்கிட்டா இந்த துறையிலிருக்கும் உங்களுக்கு நல்லது; உங்க உலகம் பெரிசாயிடும். நட்பு வட்டம், வாய்ப்புகள், துறைசார் அறிவு அதிகமாகும்” - ஒரு வருடம் முன்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது செந்தில் அண்ணா சொன்னபோதுதான் உறைத்தது. ஆமாம், இத்துறையில் இருபது வருடங்கள் அனுபவங்கள் ஆகியும் ஏன் எனக்கு இது தோணவேயில்லை என்று யோசித்தேன்.
செந்தில் அண்ணா ஸ்பெயினை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு பசுங்குடில் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிகிறார். கென்யா, டான்சானியா, எத்தியோப்பியா, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் என்று அலுவல் நிமித்தமாய் பன்னாடுகள் பயணித்துக்கொண்டே இருப்பவர். அவர் அப்பா தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தலைமை பேராசிரியராய் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
மலர் சஞ்சிகைகளின் ஆங்கில இந்திய பதிப்பு வெளியீடுகள் மேலோட்டமானவை என்றும், பன்னாட்டு ஆங்கில மாத மலர் இதழ்களும் எல்லைகள் கொண்டவை என்றும் சொன்னார். உண்மையில் மலர் தொழில்துறை பற்றிய அறிவை வளப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றால் டச்சு மொழியில் வெளியாகும் மாத இதழ்கள்தான் உகந்தவை என்றார். அடுத்தமுறை அவர் நெதர்லாந்து கண்காட்சிக்கு சென்றபோது “ஆங்கில-டச்சு” அகராதி வாங்கிவர சொன்னேன்; வாங்கிவந்து பரிசளித்தார். “கோர்டஸ்” எனும் மலரினப்பெருக்க நிறுவனத்தின் ஆப்ரிக்க தலைவரை தொடர்புகொண்டு “புளோமிஸ்ட்ரை” எனும் டச்சு மலர் மாத இதழின் பழைய இரண்டுவருட வெளியீடுகளை அள்ளிவந்தேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அகராதி துணைவைத்து எழுத்து கூட்டி படித்து கொண்டிருக்கிறேன். உண்மைதான், கொய்மலர் தொழில் துறையின் பிரமாண்டமும், அதன் பரந்த உலகும் எனக்கு புரிந்தது.
இஃப்ரைம் எனும் இஸ்ரேல் ஆலோசகரிடமிருந்து, ஹீப்ரு கற்றுக்கொள்ளும் நூலும், ஜூவான் எனும் ஸ்பெயின் நண்பரிடமிருந்து ஆங்கில வழி ஸ்பானிஷ் அகராதியும், ஃப்ரான்ஸின் லூசியிடமிருந்து ஃப்ரென்ச் ஆரம்பநிலை பாடங்களும் வாங்கி வைத்து அவ்வப்போது புரட்டி கொண்டிருக்கிறேன். பேசும் அளவுக்காவது இந்த மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டுமென ஆசையிருக்கிறது. அலுவலக இணைய கடித தொடர்புகளில் காலை மாலை வணக்கங்கள், இனிய நாளுக்கான வாழ்த்துக்கள் போன்ற சின்ன சின்ன சொற்றொடர்களை அந்தந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் மொழியில் எழுதி அனுப்பும்போது அவர்கள் கொள்ளும் உற்சாகம், அவர்களின் பதில் கடிதங்களில் தெரிகிறது.
பசந்த்குமார் பிர்லாவிற்கு மூன்று வாரிசுகள்; ஒருவர் ஆதித்யா குழுமங்களின் தலைவர் குமாரமங்கலம்; மற்ற இருவர் மஞ்சுஸ்ரீ மற்றும் ஜெயஸ்ரீ. மஞ்சுஸ்ரீ குழுமத்தின் ஓசூர் மலர்ப்பண்ணையில்தான் நான் ஆரம்பத்தில் பணிபுரிந்தது. ஜெயஸ்ரீயின் “செஞ்ச்சுரி” மலர்வளர்ப்பு பண்ணை புனேயில் இருந்தது. அங்கு மேலாளராய் வேலை செய்த சித்தார்த்-ஐ 98-ல் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். 2015-ல் கென்யா நைவாஸாவில் தோட்டக்கலை கண்காட்சியில் சுற்றிக்கொண்டிருந்தபோது, பின்னாலிருந்து தோளில் கைவிழ திரும்பி பார்த்தால் சித்தார்த் புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தார். “எப்படியும் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றில்தான் மறுபடியும் சந்திப்பேன் என்று தெரியும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.