Tamil Blindspots

From HORTS 1993
Revision as of 20:17, 17 November 2019 by Raj (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


தமிழில் எழுதும் போது  நாம் செய்யும் தவறுகள்......

1. வாழ்த்துக்கள் என்பது தவறு. 
    "வாழ்த்துகள் " என்பதே சரி. " க் "  
      வரக்கூடாது.

2. வாழ்க வளமுடன் என்பது தவறு.
     " வாழ்க வளத்துடன் " என்பதே சரி.

3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. " 
     மங்கலகரமான " என்பதே  சரி.

    " மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது. 
   
    " மங்கல இசை " என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு )
    அதாவது  நாகஸ்வரம்.நாதஸ்வரம் என்பது தவறு.
    நாகஸ்வரம் என்பதே சரி

4. நச்சுன்னு ஒரு பாட்டு , நச்சுன்னு பேசு
    என்பது தவறு. நச்சு என்றால் விஷம்.(விடம்)
   நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.
   நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது. நான் நறுக்கென்று
   சொல்லிவிட்டேன். சுருக்கென்று எடுத்துக் கொள்க.

விளக்கம்.....

இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.

ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும்போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.

ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் பெண் குழந்தைக்கு
 " மங்களா " என்று பெயர் சூட்டுவர். இத்துடன் ஊற்றி மூடிவிட்டேன் என்று பொருள். 

வள்ளுவர் தன் குறளில் , 

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கள் பேறு  - என்று பாடியிருக்கிறார்.  காண்க - மங்கலம். ( மங்களமில்லை )

வாழ்க வளத்துடன் ....

" ஒரு கோடி ரூபாய் பணத்துடன் கடை ஊழியர் ஓட்டம் " என்றுதான் சொல்வோமே தவிர " பணதுடன் " என்று " த் " என்ற ஒற்று இல்லாமல் சொல்வதில்லை. 

நான்கு குளத்துடன் ஓர் ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்குள்ளது என்றுதான் சொல்வோம். குளமுடன் என்று சொல்வதில்லை.

நல்ல குளத்தில் நல்ல நீர் ஊரும். நல்ல குலத்தில் நல்லவர் பிறப்பார். நல்ல மனத்தில் நல்ல எண்ணம் பிறக்கும். அவர் குணத்தில் குன்று. நல்ல தினத்தில் திருமணம் செய். என் நலத்தில் எனக்கு அக்கறையுண்டு.மூன்றாம் தளத்தில் எங்கள் வீடு உள்ளது. ( தளதில் என்று சொல்வதில்லை )

ஒரே தளத்துடன் பெரிய வீடு . ( தளதுடன் என்று சொல்வதில்லை ). ஆகவே " வாழ்க வளத்துடன் " என்பதே சரி.( தளம் - மாடி