பனம்பழம்
.. உனக்கு அதை சரியான பக்குவத்தில் சுட்டு கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.... ! சரியான பதத்தில் சுட்டோம் என்றால் அவ்வளவு தேன் போல இனிக்கும் பழம் அது! அதோடு... ஒரு 85% maturity ல்... அதை...சக்கை...சக்கையாக (in pieces) அரிந்து... அவித்தும் உண்பார்கள்... மிகவும் சுவையாக இருக்கும்!
பெரும்பாலும்...கிராமத்தில் சிறுவர்கள் விடியற்காலையிலேயே பனந்தோப்புகளில் பனம் பழத்துக்காக சுற்றுவதை இன்றும் பார்க்க முடியும்!
பெரும்பாலும்...இரவு நேரங்களில் தான்..இந்த பழம் மரத்தில் இருந்து விழும்! (அது ஏன் என்று இது நாள் வரையில் எனக்கு விளங்கவில்லை)
அந்த பள்ளி காலங்களில்...என் பால்ய நண்பர்களோடு...பனம் பழம் தேடி தோப்புகளில்....எத்தனையோ விடியல்கள்...இனிதாய் கழிந்து இருக்கிறது!
பிறகு...எல்லோரும் அதை ஒரு இடத்தில் கொட்டி...சமமாக பங்கிட்டு கொண்டு...வீடு திரும்புவோம்...எந்த மரத்தின் பழம்....எந்த அளவிற்கு சுவை என்பது எங்கள் எல்லோருக்கும் அத்துப்படி....! அதே போல் இந்த சித்தரை...வைகாசி மாசம் எல்லாம்...பனங்காய் சீசன்....பெரும்பாலும்....அது....இன்னொருத்தன்மரத்துல ஆட்டைய போடுவதாகவே இருக்கும்! எங்கள் Gang ல்....என்னை தவிர்த்து...மற்ற எல்லோரும் மரம் ஏறும் experts. என் நண்பர்களுக்கு என் மீது பிரியம் அதிகம்..."அவன் ஏறுவது வேணாண்டா...அவனே பாவம்...அவங்க அப்பா...அம்மா கிட்ட இல்லாம...அவங்க மாமா வீட்டில் தங்கி படிக்கிறான்...எதுக்கு அவனுக்கு கஷ்டம் பாவம்" என்று சொல்லி அவர்களே ஏறி விடுவார்கள்!
அப்படி அன்பு சொரியும் நண்பர்கள் அவர்கள்!
ஆஹா....திருடி சாப்பிடுகிற...பனங்காயிற்கு...அப்படி ஒரு சுவை! விடுமுறை நாட்களில்...காலையில் பழங்கஞ்சி...குடித்து கிளம்பினோமானால்...எங்களுடைய இந்த "Operation பனங்காய்" முடிந்து வீடு திரும்ப மாலை வேலை ஆகிவிடும்! இப்போ...அந்த நாட்கள் எல்லாம் திரும்ப வருமா?? !! 🤔🙂