Halwa

From HORTS 1993
Revision as of 19:47, 26 April 2020 by Raj (talk | contribs) (Created page with "Category:RajkumarCategory:TipsCategory:SOP அந்தமானில் இருக்கும் போது செய்த அல்வா செய்ம...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search

அந்தமானில் இருக்கும் போது செய்த அல்வா செய்முறை: அல்வா கோதுமைப்பாலில் செய்யப்படுவது. ஆனால் முழு கோதுமையிலிருந்து அது சற்று சிரமமாக இருக்கும். ஆகவே, நாம் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளலாம். Pillsbury, Aashirwad, Pathanjali are fine. ஒரு cup கோதுமை மாவு எடுத்து தண்ணீர் மட்டும் விட்டு சப்பாத்திக்கு பிசைவது போல் செய்து உருண்டையாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். அதில் 5 cup தண்ணீர் ஊற்றவும். (Upto this you can do in the morning at about 8 am) Then keep the contents as such for 8 hours. At 4 pm, அதே தண்ணீரில் உருண்டையை நன்கு பிசைந்து கரைத்து விடவும். நன்கு கரைத்த கரைசலை வடிகட்டி (nylon டீவடிகட்டி is enough or a small white cloth) பின் ஒரு கண்ணாடி jarல் ஊற்றவும். Jar இல்லையென்றால் 4 to 5 glassல் ஊற்றி வைக்கலாம். அதை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். பிறகு 6 மணிக்கு பார்த்தால் glassல் பால் தனியாக, நீர் தனியாக பிரிந்திருக்கும். நீரை மட்டும் வடித்து ஊற்றி விட்டு, கெட்டி பாலை ஒரு கப்பில் ஊற்றி அளக்கவும்.இந்த அளவு தான் முக்கியம். இது ஒரு cup என்று வைத்துக் கொண்டால், அதே அளவு (அல்லது முக்கால் cup) நெய் எடுத்து வைக்கவும். 3 cup sugar ( I used only 2¼ cup) எடுத்து வைக்கவும். ஒரு cup கோதுமைப்பாலில் 4 cup water ஊற்றி வைக்கவும். இப்போது அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள sugarல் ½ cup இட்டு வறுக்கவும். 2 spoon water சேர்த்து நல்ல brown colour வரும்வரை வறுக்கவும். பிறகு அதில் மீதி sugar இட்டு 1 cup தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு பிசுபிசுப்பாக ( கம்பி பதம்) வரும்பொழுது அதில் பால் கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து வரும் பொழுது 2 spoon நெய் விட்டு கிளறவும். பிறகு பாக்கியுள்ள நெய்யை சிறுக சிறுக சேர்த்து 20 to 25 நிமிடம் கிளறவும். கடைசியாக அல்வா நமக்கு தேவையான பதத்தில் வரும்பொழுது அதில் தேவையான முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடலாம். இப்போது நம்ம வீட்டு அல்வா ready. NB: Sugar 2 பங்கு மட்டும் உபயோகித்தாலும் ok என்று தோன்றுகிறது.


Jerard