ஆசிரியர்கள்
எழுத்தறிவித்தவன் இறைவன். அந்த இறைக்கும் முந்தைய இடத்தில் தான் குருவாகிய உங்களை உலகம் பார்க்கிறது. அறியாமை இருளை நீக்கி , வாழ்வின் ஒளி ஏற்றுபவர்கள் தான் ஆசிரியர்கள். அன்னை தந்தை போல் மனதிற்கு மிக நெருக்கமாகவும், அதேவேளையில் மிகுந்த அக்கறையுடனும், கண்டிப்புடனும் நம்மை உருவாக்குவதில் பெரும் பங்கு ஒரு ஆசிரியருக்கு உண்டு. உழைப்பு, லாபம், நஷ்டம் என்ற தொழில் கணக்கில், சற்றே மாறுபட்டு சமுதாய உணர்வும், சேவையுணர்வும் நிறைந்து காணப்படும் ஒரு உன்னததொண்டு தான் ஆசிரியர் பணி. வணங்கப்பட வேண்டியவர்கள் அனைத்து ஆசிரியர்களும். அறிவையும் அன்பையும் இணைத்து புகட்டும் இத்தகைய ஆசிரியர் உலகத்திற்கு, எங்கள் தமிழ் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும், பெரும் மதிப்பிற்குரிய எங்கள் ஆசிரியர் கலாம் அவர்களின் ஆசியுடன் வாழ்த்தும் உங்கள் கலா. மலேயா தீபகற்பத்தில் வாழும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்...💐💐💐🙏🙏🙏.