கனவு காட்சி

From HORTS 1993
Jump to navigation Jump to search

கனவு_காட்சி - 1

எனக்கு கொஞ்ச நாளாவே கன்னாபின்னானு கனவுகள் வருது; யார் யாரோ ‘Honda' டூ வீலர் - ல வந்து போற மாதிரி; அது Kinetic Honda - வா, Honda Activa - வானு தெரியல! அப்புறம், TNAU-ல (1990), நம்ம faculty பக்கத்துல, மரத்தடியில, சைக்கிள் Tea Vendor-கிட்ட நான், CP, Raj, Mahesh, Maha, Harish, Jerard எல்லோரும் டீ குடிக்கிறோம்; CP is telling Mahesh to pay. Mahesh opening her hand bag & taking out a 1000 Rs bundle and அதில் ஒரு 1000 எடுத்து she gives to Vendor. He was telling that he has no change CP is telling "No problem; keep the change!!!" அலாரம் அடித்து சட்டென்று முழித்தேன்; இருப்பது கென்யாவா, கோயம்புத்தூரா என்று கொஞ்ச நேரம் புரியவில்லை!!!

கனவு_காட்சி - 2

அதே Horti faculty அருகில் மரத்தடி. அதே பாத்திரங்கள் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.

Rani & Aruna were coming in their cycles.

CP was asking Rani "Which faculty you are?; Forestry-ஆ, Agri-ஆ?”

ராணி கொஞ்சம் அதிர்ச்சியாகி, “இல்லல்ல, நான் அவினாசிலிங்கம் காலேஜ்ல Home Science பண்றேன்; class break-ல டீ சாப்பிட வந்தேன்”

“அங்கேயிருந்து சைக்கிள்ளயேவா?” - நான் ஆச்சர்யத்துடன் ராணி சைக்கிளைப் பார்த்தேன்.

ராஜ் அருணாவிடம், “புதுசா சைக்கிள் வாங்கினா, அதுல சுத்தியிருக்கிற பிளாஸ்டிக் பேப்பரெல்லாம் கழட்டுறதில்லையா?; 8th படிச்சிட்டு direct-ஆ multi promotion-ல college-ல admission-ஆ?”

மகாவும் பார்த்துவிட்டு, “அட்டா, காதையும் கண்ணையும் திறந்து வைக்காம விட்டுட்டேனே! Honda - ல Cycle இருக்கிறது தெரியாம போச்சே?”

கனவு_காட்சி - 3

“வேண்டாம்...வேண்டாம்...விட்ரு” -னு வீட்டுக்காரர் சொல்ல சொல்ல...அனிதா குச்சி எடுத்துட்டு யாரையோ துரத்திட்டு போற மாதிரி...(ofcourse கல்யாண மேக் அப் - போடதான்)...

கனவு_காட்சி - 4

நான் ஹரீஷ் கை பிடித்துக் கொண்டு, கண்களில் நீருடன் “ஹரீஷ், 26ம் தேதி, நாங்க எங்க காலி வயிறையெல்லாம் உங்ககிட்ட ஒப்படைக்கிறோம்; அதுல ஆனந்தத்தான் நாங்க பார்க்கணும்; ’கலங்க’ விட்டுறாதீங்க” என்கிறேன்.

முன்னால் கலா நின்றுகொண்டு “ஆமா ஹரீஷ்; கவனமா பார்த்துக்கங்க...”

கனவு_காட்சி - 5

நான் திருவிளையாடல் பாணபத்திரர் மாதிரி கண்கலங்கி நிற்கிறேன். எதிரில் சிவபெருமான் சிவாஜி மாதிரி நம்ம UG group photo காற்றில் ஆடியபடி பேசிக்கொண்டிருக்கிறது.

“நான் யாருனு தெரியல?; என்ன நல்லா பாரு; இன்னும் நல்லா பாரு; நல்லா கண்ணு ரெண்டையும் முழிச்சு உத்து பாரு; இன்னும் தெரியலயா?; நாலு வருஷமா எனக்கு முன்னாடிதானே/என் கூடத்தான குப்ப கொட்டினே; இன்னுமா தெரியல....”

எனக்கு மெது மெதுவாய் ஞாபகம் வர வர... photo "ஹாஹாஹா....” என்று அசரீரி மாதிரி சிரித்துக்கொண்டே மறைந்தது.

கனவு_காட்சி - 6

VSP. இடம்: திண்டுக்கல் ADA office மொட்டை மாடி (VSP-க்கு, ADA office முதல் மாடியில்தான் தங்கியிருந்தோம்.) சிலுசிலுவென்று மாலைக் காற்று. நான், சிவா, N.Senthil, நான்காவதாய் ஒருவர் (கனவில் முகம் சரியாகத் தெரியவில்லை) பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று எங்கேயோ பார்த்துவிட்டு எழுந்து நின்று சட்டையை கழற்றினார் அவர்.

“என்னண்ணா பண்றீங்க?” - நான் கேட்டேன். “அடி, படவா ராஸ்கல், தோல உரிச்சுப்புடுவேன். எத்தனை தடவ சொல்லியிருக்கேன் அண்ணானு கூப்பிடாதன்னுட்டு...” சொல்லிக்கொண்டே பனியனையும் கழற்றினார். எனக்கு ஒரே குழப்பம்; எப்ப சொன்னார், இப்போதுகூட அண்ணானு கூப்பிட்டுதானே பேசிக்கொண்டிருந்தோம். “அப்புறம் எப்படிங்(ண்ணா-silent) கூப்பிடறது?” “சரி போ; நீயா இருக்கறதனால allow பண்றேன்; ஆனா நாலு பேரு இருக்கும்போது, அண்ணானு கூப்புடறப்ப கொஞ்சம் சவுண்ட கம்மி பண்ணிக்க...” சட்டையையும், பனியனையும் மடித்து என் கையில் தந்து “அப்படி ஓரமா சம்மணங்கால் போட்டு உட்கார்ந்துக்க; காத்துல பறந்து போயிராம பார்த்துக்க..” “என்னண்ணா பண்ண போறீங்க?” எதிர்வீட்டு இரண்டாவது மாடி ஜன்னலை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே “எக்சர்ஸைஸ்டா தம்பி! டெய்லி எக்சர்ஸைஸ் பண்ணனும். சொன்னா நீ எங்க கேட்கற; சிவாவ பாரு, உடம்ப எப்படி மெய்ண்டெய்ன் பண்றான்” இரண்டு கையையும் மடித்து காட்டினார் “எப்டிடா தம்பி...pack தெரியுதா...சல்மான்கான் மாதிரி இருக்கனா...”

வாய் என்னோடு பேசிக்கொண்டிருந்தாலும், பார்வை எதிர் வீட்டு ஜன்னலில் பதிந்து பதிந்து மீண்டது. இரண்டு கைகளையும் பக்கவாட்டில் விரித்து, ஸ்லோ மோஷனில் மேலும் கீழும் அசைத்தார். அங்கு அடுக்கி வைத்திருந்த செங்கல் இரண்டெடுத்து உள்ளங்கைகளில் பிடித்துக்கொண்டு, முழங்கை வரை முன்கைகளை மடித்து மடித்து விரித்தார்.

“அப்புறம் சொல்லுடா தம்பி, VSP-க்கு எங்காவது village-க்கு போனியா?” “நாளைக்குதாண்ணா பாப்பிரெட்டிபட்டி சைடு போகலம்னு இருக்கேன்” ”அடுத்த தெரு தியேட்டர்ல பொன்னுமணி போட்டிருக்கான்; கார்த்திக் படம்டா. நாளைக்கு போவமா?” “நேத்தே நானும் செந்திலும் போயிட்டு வந்துட்டம்ணா” “ஏண்டா, சொல்லியிருந்தா நானும் வந்திருப்பனுல்ல...சரி, பஸ் ஸ்டாண்ட் பக்கத்து தியேட்டர்ல சக்கரைத்தேவன் ஓடுது போவமா?” “அத திண்டுக்கல் வந்தன்னிக்கே பார்த்துட்டண்ணே” ”ஏண்டா, ஒரு படமும் விடுறதில்லையாடா...உழைப்பாளி போவமா தலைவர் படம்...” “அஞ்சு நாளைக்கு முன்னாடி சிவா கூட செகண்ட் ஷோ போயிருந்தேண்ணா; இடைவேளைக்கு முன்னாடியே நல்லா தூங்கிட்டேன். படம் முடிஞ்சதும் சிவாதான் எழுப்பி கூட்டிட்டு வந்தான்” “நல்ல ரசனைடா உனக்கு. இது என்ன village stay programme-ஆ இல்ல movie seeing programme-ஆ...” சொல்லிக்கொண்டே அவர் கண்கள் எதிவீட்டு ஜன்னல் பார்த்தன.

புருவங்கள் கேள்விக் குறியாகி, சட்டென்று Exercise-ஐ நிறுத்தினார். முகத்தில் லேசாய் வியர்வை. எதிர்வீட்டு இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி எல்லா ஜன்னல்களையும் ஒருவித பரபரப்புடன் மாறி மாறிப் பார்த்தார்.

ஓரத்தில் சம்மணங்கால் போட்டு உட்கார்ந்திருந்த நான் “அவங்க போயி பத்து நிமிஷம் ஆச்சுங்கண்ணா...” என்றேன்.

“அடப்பாவி! அத அப்பவே சொல்றதுக்கென்னடா...”

கனவு_காட்சி - 7

நாள்: 2014 July 26th இடம்: Golden Jubilee Hall நேரம்: காலை 8 மணி

Raj was talking to someone with bit of tension...

"உங்கள extra speakers மட்டும்தான கொண்டுவர சொன்னேன். யாரு ‘குழாய்’ amplifier கொண்டுவந்து RI building மேல கட்டச் சொன்னது?!; கட்ணதும் இல்லாம, high volume-ல, மாரியம்மன் கோவில் கூழ் ஊத்துற திருவிழா மாதிரி “கரகம் எடுத்து ஆடி வந்தோம் முத்து மாரி”ன்னு LR ஈஸ்வரி பாட்டு வேற போட்டிருக்கீங்க! லாலி ரோடு ஜங்ஷன்லருந்து traffic police போன் பண்ணி சத்தம் போடறார்!.....”

கனவு_காட்சி - 8

கனவு காட்சி - 8

நாள்: 2014 July 26th. இடம்: Lunch Samiana. நேரம்: 2.30 pm

Hariesh was running up and down. There was a small gathering near Quarter Chicken table...

அருள் அவசர அவசரமாய் ஓடி வருகிறார்...

“ஹரீஷ் சார்...ஹரீஷ் சார்..."Quarter Chicken" table-ல, “Chicken" மட்டும்தான் இருக்கு...”Quarter" எங்க-னு கென்யாலருந்து வந்திருக்கிற அந்த கண்ணாடி போட்டு குண்டா இருக்கறவர் கேட்டு ரகளை பண்றாரு...இப்ப என்ன பண்றது?!!!!....”

கனவு_காட்சி - 9

நாள்: 26.07.2014 இடம்: SJM Lunch Samiana.

Venky was sitting on a chair; kids were playing near the samiana. Meena was coming that side after talking to Savi...

"வெங்கடேஷ், சாப்பிட்டாச்சா?; ஏன் கண்ணு கலங்கிருக்குது?...”

“21 வருஷம் கழிச்சு எல்லாரையும் பார்க்கும்போது...”

“சரி...சரி...ஓவரா சீன் போடாத! ஹலோ Blue boy இங்க வாங்க . இவருக்கு கண்ணீர் துடைக்க ரெண்டு bundle serviette கொடுங்க. வர வர நீ காரணமே இல்லாம கண் கலங்கற!...”

Rani was coming there.

"வெங்கிய நல்ல ஒரு Psychiatrist-கிட்ட consult பண்ணச் சொல்லணும்; இரு நம்ம group "REFERENCE BOOK" பார்த்து, நம்ம batch-ல யாராவது Psychiatrist-டா practice பண்றாங்களான்னு பார்க்கலாம்”

Rani was calling Raj (when he was thinking seriously "தம்புராஜ் சாருக்காகவாவது போய் சட்டைய போட்டு வந்திரலாமா?”)

“Raj, நம்ம group "REFERENCE BOOK" என்னாச்சு?”

“Hey! Printo-ல கொடுத்துருக்கேன்; 10000 pages-க்கு மேல போறதுனால copies போட கொஞ்சம் லேட்டாகுது; அடுத்த meet-லதான் distribute பண்ணமுடியும்னு நினைக்கிறேன்!?”

நான் Blue boy-யிடம் இன்னொரு bundle serviette கேட்டுக்கொண்டிருக்கிறேன்!!!

கனவு_காட்சி - 10

இடம்: சரியாய் தெரியவில்லை; க்லென்மார்கன் அல்லது பெங்களூரு - ராஜ் வீடு; வீட்டின் முன்னால் மிகப்பெரிய மரம்; I was seeing a lake in front of the house (then it is Glenmorgan only).

காலம்: குழப்பம் (I thought it was post SJB; but Raj was in Glenmorgan home?!)

நேரம்: முன்னிரவு 11.30 pm.

I was entering Raj's room; Raj was sitting in front of his Desktop computer; huge monitor (10 feet x 10 feet) was fixed on the wall; I was seeing some graphs in the monitor. In the corner of room, a carton box was there with full of comics books.

நான் ஆசையுடன் ஒரு “இரும்புக்கை மாயாவி” புத்தகத்தை எடுத்து புரட்டுகிறேன்.

Raj was calling me "Hey Venky, come here and see this..."

I was seeing a complicated graph on the wall monitor. "How come here net speed is very good Raj?" "I have done some modification in PC's receiver; it is getting signal from the TREE which is opposite to the house"

நான் திருதிருவென்று முழிக்கிறேன்.

“சரி அதவிடு; இந்த graph பாரு; உன்னோட Maturity level-ம், IQ-ம் எப்படி இருக்குன்னு ஒரு Octagon shape-ல graph போட்டு பார்த்தேன். X-ல years-ம், Y-ல maturity level-ம் வச்சு, நம்ம எல்லா meets-யையும் parameters side-ல வச்சு, horizontal lines போட்டு graph curve-வோட attach பண்ணி, ஒவ்வொரு காரணிக்கும் x, y, z... - ன்னு symbol கொடுத்து, square root of 2xy + 3n - 12/2.33z x 1.4a -ன்ற formula-ல fix பண்ணி பார்க்கறப்ப....”

நான் கொஞ்சம் பதட்டத்துடன் ராஜ் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

”உனக்கு அடுத்த பிறவியிலேதான் Maturity level கொஞ்சமாவது ஜாஸ்தியாகும்!!!”

தூக்கி வாரிப் போட்டு கனவிலிருந்து விழித்துக்கொண்டேன்.