காற்று
உடலின் காற்று பூதம் தொடர்பான உள் உறுப்புகள் நுரையீரலும், பெருங்குடலும். தொடர்பான வெளி உறுப்புகள் மூக்கும், தோலும். தொடர்பான சுவை காரம் (Pungent); தொடர்பான உணர்வு துக்கம் (கவலை அல்ல; கவலை என்பது worry/concern; துக்கம் என்பது mourn).
அளவுக்கதிகமான துக்கம் நுரையீரலை பாதிக்கும். “துக்கம் தொண்டை அடைக்கிறது” என்று சொல்லும்போது, மூக்கிற்கும், நுரையீரலுக்குமான சுவாசக்குழலில் சுவாசம் தொந்தரவாகிறதென்று பொருள். தோல் வியாதிகளுக்கு நுரையீரல் பிரச்சனைகளும் காரணமாயிருக்கலாம்.
நம் உடம்பிற்கு சுத்தமான போதுமான காற்று உணவு அவசியம். நாம் சுவாசிக்கும் காற்றும், நமக்கான உணவுதான். நாம் சுவாசிக்கும் காற்று அசுத்தமானதாயிருந்தால் உடலில் (தோல், சுவாசம் மற்றும் மூக்கு தொடர்பான) நோய்கள் உண்டாகும். Asthma, Wheezing, Psoriasis போன்றவை உடலில் காற்று பூதம் சமநிலையில்லாமையால் உண்டாகுபவை.
சுத்தமான காற்றுக்கு...
1. படுக்கையறை விசாலமாய், காற்றோட்டமாய் இருக்கவேண்டும்; எல்லா ஜன்னல்கள் மற்றும் கதவு மூடி உள்ளே தூங்க கூடாது. உயரத்தில் ஒரு சின்ன இடைவெளியிலிருந்தாவது (வேண்டுமென்றால் கொசு வராமலிருக்க net அடித்துக் கொள்ளலாம்) புது காற்று உள்வர வேண்டும்.
2. கொசு வலை உபயோகிக்கலாம்; கண்டிப்பாக கொசுவர்த்தி சுருள் பயன்படுத்தக் கூடாது. ரூம் ஜன்னல்கள், கதவு எல்லாம் பூட்டி, உள்ளே கொசுவர்த்தி வைத்து தூங்கினால், சீக்கிரம் மேலே போகலாம்!.
3. அடிக்கடி இரவில் சிறுநீர் கழிக்க எழுந்தால், அறையில் அசுத்தமான காற்றோ அல்லது காற்று குறைவாகவோ இருக்க வாய்ப்பிருக்கலாம். தூங்கும்போது உடலுக்கு போதிய நல்ல காற்று கிடைக்கவில்லையென்றால், உடல் அதனுள்ளிருக்கும் தண்ணீர் பிராணணிலிருந்து காற்றை எடுக்க ஆரம்பிக்கும். கிட்னிக்கு போதிய தண்ணீர் பிராணன் கிடைக்கவில்லையென்றால் அது தண்ணீர் கேட்கும்; தாகமெடுக்கும்; சிறுநீர் கழிக்க உந்துதல் தரும். This may cause Kidney problems.
புகை பிடித்தல் (Smoking) பற்றி ஒரு சொல் கூட விவாதிக்க வேண்டாம். நம் உடம்பை நாம் காதலிக்கவில்லையென்றால்/விரும்ப வில்லையென்றால், நாம் உண்ணும் உணவை நம் உயிராய் மாற்றும் அந்த கோவிலை நேரடியாய் நோயுறச் செய்ய வேண்டுமென்றால்...நாம் புகைக்கலாம் :(
4. கூடுமானவரை ஏர் கண்டிஷனர் உபயோகம் தவிர்ப்பது நல்லது; if we want to use (if necessary - சும்மா பந்தாவுக்காக வாங்கி மாட்டக் கூடாது!), we can select the type which intake outside air and circulate with indoor air; also better to set temp. with our body temp.
5. மூச்சு பயிற்சிகளும் (நாடி சுத்தி போன்ற), பிராணாயாமும் உடல் காற்று பூதத்தை சீராக வைக்க உதவும்.