நெருப்பு

From HORTS 1993
Jump to navigation Jump to search

பாலகுமாரன் தாயுமானவனில் ஒரு சித்தர் பாடல் வரும்...

“நெருப்புக்குள் நெஞ்சு வைத்து

நெஞ்சுக்குள் நெருப்பு வைத்து
விந்தைகள் செய்தாரடி கிளியே
வேடிக்கை உலகமடி!...”

I have heard...

பஞ்ச பூதங்களினால் ஒரு உலகம்; அவ்வுலகத்தில் பஞ்ச பூதங்களால் ஆன உடம்பு; அவ்வுடம்பிற்கு பஞ்சேந்திரிய வாசல்கள்; அவ்வாசல்கள் வழி உள் பஞ்ச பூதங்களுக்கான உணவு!!!; உள்ளே புகுந்தவற்றால், மூன்றடுக்குகளாய் மாறிப்போன/ஆகிப்போன (Conscious, Sub Conscious, Super Conscious) மனம் என்ற வஸ்து. புத்தி (Knowledge) இதில் Conscious mind-ன் ஒரு Utility tool.

அற்புதமான விளையாட்டல்லாமல் வேறென்ன?!; இதில் மரணம் என்பது...

நெருப்பை பார்ப்போம்.

நெருப்பு பூதம் தொடர்புடைய உடல் உள் உறுப்புகள் இதயமும், சிறுகுடலும். நாக்கு இதன் வெளி உறுப்பு. இதன் உணர்வு மகிழ்ச்சி; இதன் சுவை கசப்பும் துவர்ப்பும். இதயம் நன்றாய் இயங்க தினசரி/அன்றாட உணவில் கசப்பும் துவர்ப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காய், சுண்ட வத்தல், எல்லா கீரை வகைகள், வாழை தண்டு...

ஏன் இப்போதெல்லாம் இதயப் பிரச்சனைகள் அதிகமாக கேள்விப்படுகிறோம்?; பெரும்பாலான நாம் உணவில் கசப்பே சேர்ப்பதில்லை. உண்ணும் உணவையும் ”நாக்கால்” சுவைக்காமல், பற்களால் மெல்லாமல் அப்படியே உள்ளே தள்ளுகிறோம். மகிழ்ச்சியாய் இருந்தால் இதயம் நன்றாக இருக்கும்.

இரத்தத்தின் வெப்பம்/நெருப்பு/அக்னி மிக முக்கியம்; நோய்கள் வராமலிருக்க வெப்பம் மிக அதிகமாகவோ, மிக குறைவாகவோ இல்லாமலிருக்க வேண்டும். இரத்தம் அளவான சூட்டில் இருந்தால்தான் மனம் தெளிவாக இருக்கும்; உடல் சுசுறுப்பாய் இருக்கும். உடலின் வெப்பம் பேண, (நம் அன்றாட தினசரி வேலைகள் உடம்பு சூடடைய போதவில்லை என்றால்), தினசரி நடையோ, யோகா பயிற்சிகளோ செய்யலாம். உடம்பு குளிர தியானம், சவாசனம் செய்யலாம். ஜிம்மில் பயிற்சிகள் முடித்து உடம்பு சூடான பின் ஐந்து நிமிடம் சவாசனம் செய்தால் work out-ன் முழுப் பலன்கள் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஏன் பெரும்பாலும் நோய் வருவதில்லை?; அவர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும், கை கால்கள் அசைத்துக் கொண்டும், விளையாட்டுமாய் இருக்கிறார்கள். உடம்பின் சூடு maintain ஆகிறது. வயதாக வயதாக நாம் உடம்பை சூடேற்றுவதேயில்லை; உடல் உறுப்புகளை, இணைப்புகளை (Joints) ஆட்டுவதேயில்லை. ஒன்று நிச்சயம் - நம் உடல் உறுப்புகளை, இணப்புகளை நாமே அசைத்து உடற்பயிற்சி மூலம் உடல் நெருப்பை பராமரிக்க வில்லையென்றால், டாக்டருக்கு காசு கொடுத்து, அவர் வந்து நம் உடலை ஆட்ட வேண்டியிருக்கும் (முதுகு வலி, மூட்டு வலி, கழுத்து வலி...).

நம் உடலில் நிண நீர் இயக்கம் (Lymphatic System) என்ற ஒன்று இருக்கிறது; this is responsible for our immune system. நோய்களை குணப்படுத்தும் நீர் இயக்கம். உடலில் இரத்தத்தை pump செய்ய இதயம் என்ற மெஷினாவது இருக்கிறது; Lymph (நிண நீர்)-ஐ pump செய்ய உடலில் எந்த மெஷினும் கிடையாது!!!; அதனை இயக்க ஒரே வழி கை, காலை உடலை அசைப்பதுதான். உடலை அசைக்காமல் வைத்திருந்தால், Immune system பாதிக்கும்.

வெயில் பிரதேசங்களில், அதிக உடற்பயிற்சிகளுக்கு அவசியமில்லை; ஏனென்றால் ஏற்கனவே உடம்புக்கு அதற்குத் தேவையான சூடு கிடைத்திருக்கும்; அங்கு அதிகம் உடற்பயிற்சிகள் செய்தால் உடம்பு சூடு அளவுக்கதிகமாகி, அதுவே நோய்கள் உண்டாக்கும். குளிர் பிரதேசங்களில், உடல் அசைவுகள், உடற்பயிற்சிகள் மிக முக்கியம். குளிர் பிரதேச பாடல்கள், பாடகர்கள் (Rock, Jazz...) அளவுக்கதிகமான உடலசைவுகள், சத்தங்கள் கொண்டவையாக ஏன் இருக்கின்றன என்று புரிகிறதா?; வெயில் பிரதேச பாடல்கள் அதிக உடலசைவுகள் இல்லாதவை. நாம் கூட வெயில் மாதங்களில் உடல் அசைவுகள் குறைத்தால் நல்லது; தியானம், சவாசனம் போன்ற உடம்பு சூடு குறைக்கும் பயிற்சிகள் செய்யலாம். குளிர் மாதங்களில் யோகா, உடற்பயிற்சிகள் செய்யலாம்.

நம் கெண்டைக் கால்களும், இதயம் அளவிற்கே மிக முக்கியமானவை. நாம் உட்காரும்போது, கால்களை தொங்க விட்டு உட்காராமலிருப்பது நல்லது. கால்களை மடக்கி சம்மணங்கால் போட்டோ அல்லது நீட்டியோ (horizontal) உட்கார்ந்து கொள்ளலாம். Dining Table உபயோகிக்காமல் கீழே உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது!!! (என்னது?!).

ஓடியாடி விளையாடும் குழந்தைகளை, “ஒரு இடத்துல கம்னு உட்காருதா பாரேன்” என்று அதட்டி உட்கார வைக்காதீர்கள்; அந்த இள இரத்தம் சூடாக இருக்க வேண்டும்; அதற்குத்தான் அந்த உடல் ஓடுகிறது; ஆடுகிறது; அசைகிறது; ஆட்டுகிறது. இந்தக் கால நம் குழந்தைகளுக்கு உடல் ஆட்டத்தின் முக்கியத்தை நாம்தான் கற்பிக்க வேண்டும். (டிவி திரைகளின் முன்னாலும், கம்ப்யூட்டர் வீடியோ கேம்ஸ் திரைகளின் முன்னாலும் packed chips பாக்கெட்டுகளோடு உட்கார்ந்திருக்கும் குழந்தைகள் பார்த்தால் பயமாயிருக்கிறது).

நம் தாத்தா பாட்டிகளின் தலைமுறை ஆரோக்கியாமான தலைமுறை; நமது அப்பா, அம்மாக்களின் தலைமுறையும் 99% ஆரோக்கியமானதுதான். நம் தலைமுறை ஒரு 50-50 தலைமுறை; நமக்கு ஆரோக்கியமான தாத்தா பாட்டிகளின் ஆரோக்கியமாய் வாழ வழிகாட்டுதலாவது இருந்தது. நம் குழந்தைகளைப் பாருங்கள்; அவர்களுக்கு என்ன மாதிரியான உலகை நாம் கொடுத்து விட்டு போகப்போகிறோம்?; ஆரோக்கியமாய் வாழ அவர்களுக்கு வழி காட்ட வேண்டாமா?

பொதுவாய் இப்போது வரை, ஒரு முந்தைய தலைமுறை இறப்பிற்குப் பின்தான் அடுத்த தலைமுறை இறக்கும் (அசாதாரண மரணங்கள் தவிர்த்து). இப்போது தவறான உணவுப் பழக்க வழக்கங்களாலும், விஷமாய்ப் போன உணவுகளாலும், அதனால் ஏற்படும் நோய்களை அதன் மூலம் பார்த்து தீர்க்காமல், அவற்றின் அறிகுறிகளுக்கு (symptoms) மட்டுமே வைத்தியம் பார்ப்பதாலும்...

யாரோ கண்ணீரோடு சொன்னார்கள் - “இந்தத் தலைமுறை மட்டும்தான், தன் அடுத்த தலைமுறை மரணங்களை இருந்து பார்க்க போகிறது”; இது எவ்வளவு பெரிய வலி!; இறைவா! இது நடவாமல் போகக் கடவதாக!!!