Rani R

From HORTS 1993
Jump to navigation Jump to search


WhatsApp Image 2021-01-09 at 8.10.20 PM.jpeg
இலையுதிர் காலம் : இனிய காலை

இளங்கதிரோனின் இதமான கருணை மழை...!
பழுப்பு, சிவப்பு, மஞ்சள் வண்ண இலைக் கோலம்...!
பனி உருகி பாய்ந்தொழுகும் நீர்வீழ்ச்சி...!
சத்தமின்றி சலசலக்கும் ஓடையின் சந்ததி...!
விழி நோக்கும் திசை எங்கும் கலந்தோடும் மலைச்சாரல்...!
தோகைமயில் துயிலுரித்த வானமகள்...!
தித்திக்கும் தேன் சுவையில் நான்...!
மோனத்தின் மௌனத்தில் என் மனம்...!
இதற்கு மேல் ஏது இனிய கானம்...!
இயற்கையின் அற்புதம் இலையுதிர் காலம்...!

படைப்பு : இராணி